Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 30 ஜூன் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இருவீட்டார் இடையே நேற்று இந்த காதல் விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதில் இளைஞரின் வீட்டார் சிறுமி வீட்டையும் இரு சக்கர வாகனங்களையும் சூறையாடி அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில்,இளம் காதலர்கள் இருவரும் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
காதலால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டது ஆணவக்கொலை சம்பவமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்த, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர் பார்த்திபன் என்பவரை நேற்று பெண் தரப்பினர் தாக்கியதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொறையார் போலீசார், சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் மற்றும் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காதலர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்தும், இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b