Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஜூன் (ஹி.ச.)
மதுரை மேலூரில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியபோது,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது என நான் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் சொன்ன கருத்தை பொதுப்பிரச்சனையாக மாற்றியிருக்கிறார்கள்
கடந்த காலத்தில் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டது என்பது அவுட்சோர்சிங் விஷயத்தில் மதுரை மாநகராட்சி தூய்மை பணிகள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்துவதில் அந்த நிறுவனம் மிக மோசடியை செய்து கொண்டிருக்கிறது
அதற்கு எதிராக பல போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிஐடியு விசிக தோழர்களும் இரண்டு ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் பலமுறை நான் தலையிட்டு இருக்கிறேன்
ஒப்பந்த நிறுவனத்தின் கோர விளைவு தான் 916 டன் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்துவதற்கு பதிலாக நாளொன்றுக்கு 100க்கு மேற்பட்ட டன் மண் அள்ளி போட்டுவிட்டு குப்பை அள்ளிப் போட்டதாக கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த குற்றச்சாட்டை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆய்வுக்கூட்டத்தில மதுரை எம்பி என்ற முறையில் பிரச்சனையை கிளப்பினேன் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னேன் ஆனால் போன வாரம் வரை எந்த நடவடிக்கையும் இல்லை கடந்த காலத்திலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை இப்போதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை
இந்த தனியார் மயமாக்கல் ஒப்பந்தமே மக்கள் நலனுக்கு எதிரானது மாநகராட்சி ஆணையாளராலே எதுவும் செய்ய முடியாது அந்த ஒப்பந்தத்தை தலைமையகத்தில் ஒப்பந்தம் எடுக்கிறார்கள் அங்கு ஒப்பந்தம் எடுத்து விட்டு வந்து விட்டேன் உங்களுக்கு கட்டுப்பட முடியாது என எந்த மாநகராட்சி ஆணையாளரும் தலையீடு செய்ய முடியவில்லை இதுதான் உண்மை.
தனியார் மயமாக்கல் என்பது மிக மோசமானது 5 கோடி மக்கள நகரங்களில் வாழ்கிறார்கள் 5 கோடி மக்களின் நல்வாழ்வை விட 21 நிறுவனங்களின் கொள்ளை லாபம் தான் முக்கியமா என்ற கேள்வி எழுகிறது
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுக்கிற அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் ரத்து செய்யப்படும் வரை எல்லா அதிகாரிகளின் கைகளிலும் இந்த பிரச்சனையில் கட்டப்பட்டு தான் இருக்கும்
இந்த பிரச்சனை குறித்து பேசியதை முற்றிலும் திரித்து செய்து வெளியிடப்பட்டுள்ளது
கைகள் கட்டப்பட்டருந்தாலும் அதை மீறி செயல்படுவது தான் நேர்மையான அதிகாரிகள் அப்போதும் இருக்கிறார்கள் இப்போதும் இருக்கிறார்கள் இது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல அரசாணை சம்பந்தப்பட்ட பிரச்சனை.
தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுக்கிற அரசாணை சம்பந்தப்பட்ட பிரச்சனை அந்த அரசாணை ரத்து செய்யும் வரை மாநகராட்சி அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது அவர்களது கைகள் கட்டப்பட்டு தான் இருக்கும் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம்
திருப்பரங்குன்றம் கண்மாயில் தூய்மை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவன லாரிகள் மண் கடத்தப்பட்டது தொடர்பாக முதலில் புகார் அளித்தது சிஐடியு தோழர்கள் தான்
இது தொடர்பாக தான் கேள்வி எழுப்பப்பட்டது மாநகராட்சி ஆணையர் இந்த பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி தரப்பிலும் புகார் மனு அளித்துள்ளோம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
இரண்டு நாளைக்கு பிறகு மாவட்ட ஒருங்கிணைப்பு வளர்ச்சி திட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது அந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஊடகத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN