மும்பையில் பவன் கல்யாண் -தேவேந்திர ஃபட்னவிஸ் சந்திப்பு, ஆந்திராவுக்கு 2 பெண் புலிகள் வழங்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்
மும்பை , 30 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களை மும்பையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தூரக் காடுகள் பகுதிகளில் புலிக
A


மும்பை , 30 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களை மும்பையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தூரக் காடுகள் பகுதிகளில் புலிகள் பாதுகாப்பு மற்றும் இரு மாநிலங்களுக்கிடையிலான வனவிலங்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பவன் கல்யாண் கூறியதாவது:

ஆந்திரப் பிரதேசத்தின் தூரக் காடுகளில் பெண் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் இனப்பெருக்கத்தில் மரபணு தொடர்பான பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது. இதை சமாளித்து புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஆந்திராவுக்கு இரண்டு பெண் புலிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்புக்காக மகாராஷ்டிரா அரசுக்கும் முதல்வர் தேவந்திர ஃபட்னவிஸுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்களுக்கும் பவன் கல்யாண் நன்றி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மூலம் தூரக் காடுகளில் மரபணு பல்வகைமை அதிகரித்து, ஆரோக்கியமான மற்றும் நிலையான புலிகள் வாழ்விடம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA