Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)
போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 233 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற மற்றொரு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த இரண்டு போராட்டங்களும் போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam