Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 30 ஜூன் (ஹி.ச)
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞரும், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சாந்தங்குடி கிராமத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இருவரும் காதலித்து வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொறையார் காவல் துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது ஆணவக் கொலையா அல்லது காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமத்தில் ஏதேனும் மிரட்டல் இருந்ததா, குடும்பத்தினரின் எதிர்ப்பு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறையின் விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b