Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 30 ஜூன் (ஹி.ச.)
டெல்லி–மெல்போர்ன் வழித்தடத்தில் பயணிகளுக்கு மேம்பட்ட விமானப் பயண அனுபவத்தை வழங்கும் வகையில், ஏர் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட போயிங் 777-300ER சொகுசு விமானங்களை நாளை (ஜூலை 1) முதல் இயக்குகிறது.
இந்த புதிய விமானங்களில் முதல் வகுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வணிக வகுப்பு இருக்கைகள், அதிநவீன பொழுதுபோக்கு வசதிகள், பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய வை-பை இணைய வசதி, சர்வதேச தரத்திலான உணவு உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் நீண்ட தூர சர்வதேச பயணிகள் வசதியாகவும், தரமான பயண அனுபவத்தையும் பெறுவார்கள் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லி–மெல்போர்ன் வழித்தடத்தில் வாரத்திற்கு 4 முறை இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் வரவேற்பு அதிகரித்து வருவதால், வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் இந்த சேவை தினசரி விமான சேவையாக உயர்த்தப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய சொகுசு விமான சேவை அறிவிப்பு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA