ஆந்திரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
அமராவதி , 30 ஜூன் (ஹி.ச.) டெல்லியில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்குள்ள ஆந்திரப் பிரதேச மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது
A


அமராவதி , 30 ஜூன் (ஹி.ச.)

டெல்லியில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்குள்ள ஆந்திரப் பிரதேச மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரது வருகையையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

நாளை மீண்டும் ஆந்திரப் பிரதேசம் செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அனந்தபூரில் உள்ள ஆந்திரப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து பெங்களூரு திரும்பும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசாகப்பட்டினம் மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA