உத்தராகண்டில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிக்கும் முதல் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி
உத்தராகண்ட் , 30 ஜூன் (ஹி.ச) உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வரும் ஜூலை 4-ஆம் தேதி, அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பதவி வகித்த முதல் பாஜக முதலமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளார். தாமிக்கு முன்பு, உத்தராகண்டில் முழு 5 ஆ
Pushkar Singh Dhami is the first BJP Chief Minister in Uttarakhand to serve a full five-year term


உத்தராகண்ட் , 30 ஜூன் (ஹி.ச)

உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வரும் ஜூலை 4-ஆம் தேதி, அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பதவி வகித்த முதல் பாஜக முதலமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளார்.

தாமிக்கு முன்பு, உத்தராகண்டில் முழு 5 ஆண்டு காலம் பதவி வகித்த ஒரே முதலமைச்சர், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் தத் திவாரி ஆவார். அவர் 2002 மார்ச் 2 முதல் 2007 மார்ச் 7 வரை பதவியில் இருந்தார்.

தாமி முதன்முறையாக ஜூலை 4, 2021 அன்று பதவியேற்றார். 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் உத்தராகண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற ஒரே முதலமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

2000-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் உருவானதிலிருந்து இதுவரை 10 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர்.

தாமியின் ஆட்சிக் காலத்தில் ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சம்பாவத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ₹123.79 கோடி மதிப்பிலான 17 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

₹27.79 கோடி மதிப்பிலான 8 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. ₹96 கோடி மதிப்பிலான 9 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் ₹3.49 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஜிம் கார்பெட் டிரெயில் திட்டமும் அடங்கும்.

இதில் ஜிம் கார்பெட்டுடன் தொடர்புடைய மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பாவத் பேருந்து நிலைய சாலைப் பகுதியில் அமையவுள்ள நகர மையத்திற்கான பூமி பூஜையிலும் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார்.

சம்பவத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநில சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுமார் ₹6 கோடி செலவில் நிறுவப்பட்ட நவீன எம்.ஆர்.ஐ. இயந்திரத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இது ஐசிஐசிஐ அறக்கட்டளையின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் வழங்கப்பட்டது.

மாநில அரசின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு மார்ச் மாதம் பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் “மக்கள் அரசு – சிறப்பின் நான்கு ஆண்டுகள், தொடர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் உத்தராகண்ட்” என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b