டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பிப்பதிவு - இன்று முதல் தொடக்கம்
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசுத்துறையில் துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 26 காலியிங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிர
Registration for the TNPSC Group-1 Preliminary Exam


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசுத்துறையில் துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 26 காலியிங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று(ஜூன் 30-ம் தேதி ) தொடங்குகிறது. ஜூலை 29-ம் தேதி முடிவடையும்.

முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம் தேதி அன்று நடைபெறும். குரூப்-1 தேர்வை பட்டதாரிகள் எழுத தகுதியுடையவர் ஆவர். வயது வரம்பு பொதுப்பிரினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மொத்தம் 26 காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

26 காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், விரைவில் காலியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b