சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மேலும் 42 சட்டவிரோத ரிசார்ட்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத ரிசார்ட்கள் மற்றும் சுற்றுலா தங்கும் விடுதிகளால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம
Sathya


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத ரிசார்ட்கள் மற்றும் சுற்றுலா தங்கும் விடுதிகளால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் பெரும்பாலான ரிசார்ட்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த வனத்துறை தரப்பில்,

ஆசனூர், கேர்மங்கலம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 42 ரிசார்ட்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மற்ற ரிசார்ட்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

விசாரணையின் போது, சட்டவிரோதமாக செயல்படுவதாக கண்டறியப்படும் ரிசார்ட்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சீல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ