ஜூலை 10ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் கரூர் பயணம்
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பல்வேறு அறிவிப்புகளை மேற்கொண
ஜூலை 10ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் கரூர் பயணம்


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பல்வேறு அறிவிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 10-ம் தேதி கரூருக்கு விஜய் செல்ல இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக த.வெ.க தலைவர் விஜய் தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி கரூருக்கு இரண்டு நாள் பயணமாக செல்லும் விஜய் கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற இருப்பதாகவும் அதேபோல பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் 9 மாதங்களுக்கு பிறகு கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கரூருக்கே சென்று விஜய் பார்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b