Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 30 ஜூன் (ஹி.ச.)
இன்று முதல் நான்கு நாட்கள் கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே கனிம வளங்களை ஏற்றி வினியோகம் செய்வோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
காரணம்பேட்டை, காரமடை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கிரஷர் குவாரி உரிமையாளர்களையும் அதிக பாரம் ஏற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.
வேலை நிறுத்தத்தால், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது.
பொதுமக்கள் கட்டுமான துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA