Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 30 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் பாசமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி தொழிற்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில், வேலைக்காக பிற மாநிலங்களில் இருந்து வந்த 54 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அந்த சோக சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி முன்னாள் அமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் வெளியிட்ட அறிக்கையில்,
இந்த விபத்துக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அரசின் கண்காணிப்பு குறைபாடும், தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமுமே காரணம்.
விபத்து நடந்த நாளில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதும், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பிறகே மறுநாள் அங்கு சென்றார்.
விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும், அரசின் சார்பில் ரூ.1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், தொழிலாளர்களின் பி.எப்., இ.எஸ்.ஐ., உயிர்காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளையும் இழப்பீட்டில் சேர்த்துக் காட்டி குடும்பங்களை ஏமாற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இறப்பு சான்றிதழ் பெறுவதற்கே குடும்பத்தினர் பல மாதங்கள் அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டதாகவும், வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் ஒரு கூட்டுப் படுகொலைக்கு இணையானது என்றும், 818 ஹார்ஸ்பவர் திறனுக்கு மட்டுமே அனுமதி பெற்ற தொழிற்சாலை 1777 ஹார்ஸ்பவர் திறனில் இயக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு சாதனங்கள், தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று
(Fire NOC), தூசி கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாதது விசாரணையில் தெரியவந்ததாகவும்.
மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்ட உடனேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ஹரீஷ் ராவ் தனது அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA