Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 30 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலியில் தற்போது சுபமுகூர்த்தங்கள் மற்றும் விழாக்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.
இதனால், சந்தையில் பூக்களின் தேவை கணிசமாகக் குறைந்து, அவற்றின் விலை பெருமளவு சரிந்துள்ளது.
பூக்களின் விலை குறைவால் பொதுமக்கள் மற்றும் பூக்கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, திருநெல்வேலி சந்தையில் ஒரு கிலோ பூக்களின் விலை பட்டியல்,
மல்லிகை: 350 ரூபாய், அரளி: 300 ரூபாய், சம்பங்கி: 160 ரூபாய், பெங்களூரு ரோஸ்: 140 ரூபாய், ரோஜா: 120 ரூபாய், கேந்தி: 25 ரூபாய்.
விழாக்காலங்களில் கிடுகிடுவென உயரும் பூக்களின் விலை, தற்போது குறைந்துள்ளதால் சாமானிய மக்கள் தங்களுக்குத் தேவையான பூக்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த விலை சரிவு தற்காலிகமானது என்றும், அடுத்த முகூர்த்த நாட்களில் மீண்டும் விலை உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூக்களின் விலை குறைவு திருநெல்வேலி சந்தையில் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN