எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா எதிரொலி -கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கரூர் தொகுதி காலியானத
தலைமைச் செயலகம்


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதன் மூலம், தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையும் 234-ல் இருந்து 227 ஆக குறைந்துள்ளது.

சமீபகாலமாக தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அந்த வரிசையில், கரூர் தொகுதி உறுப்பினரின் ராஜினாமாவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P