மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
சேலம், 30 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென கணிசமாக குறைந்துள்ளது. இ
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு


சேலம், 30 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென கணிசமாக குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 158 கன அடியாக இருந்த நீர்வரத்து 141 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் 78.81 அடியில் இருந்து 78.54 அடியாக குறைந்துள்ளது.

அணையின் மொத்த நீர் இருப்பு தற்போது 40.52 டிஎம்சியாக பதிவாகியுள்ளது.

அதேவேளையில், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் பாசன தேவைகளை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்பதும், மொத்த நீர் தேக்கும் திறன் 93.47 டிஎம்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b