Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பிறந்தநாளையொட்டி, இன்று அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், தேசிய பொதுக்குழு உறுப்பினர், பாஜக, மற்றும் நடிகருமான சரத்குமார் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அண்ணாமலையின் அரசியல் பயணம் மற்றும் பொதுவாழ்வில் அவர் ஆற்றி வரும் பணிகளை சரத்குமார் பாராட்டியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசியத் தலைமையிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துவிட்டு, புதிய அரசியல் இயக்கம் அல்லது தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பிறந்தநாளான இன்று (ஜூன் 4 ) புதிய அரசியல் நிலைப்பாட்டை அண்ணாமலை அறிவிக்கக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b