அதிமுக உள்கட்சி விவகாரம் - ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வழக்குகள் வாபஸ்
சென்னை, 04 ஜூன் (ஹி.ச.) அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்திருந்த உரிமையியல் வழக்குகளை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூலை
Ops


சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்திருந்த உரிமையியல் வழக்குகளை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், அந்தக் கூட்டத்தில் தங்களை கட்சியில் இருந்து நீக்கிய முடிவுகளை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்குகளை வாபஸ் பெற விரும்புவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகளை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான கடிதம் பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்குகளை நீதிபதி குமரேஷ் பாபு முடித்துவைத்து உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், கட்சியின் தலைமை மாற்றம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரங்களை மையமாகக் கொண்டு தொடரப்பட்டு வந்த இந்த வழக்குகள், தற்போது வாபஸ் பெறப்பட்டதன் மூலம் அந்த வழக்குப் பிரிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ