உலக சுற்றுச்சூழல் தினம் - நாளை சைக்கிளில் பயணம் செய்யும் முதல்வர் சந்திரபாபு நாயுடு
விசாகப்பட்டினம் , 04 ஜூன் (ஹி.ச.) உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தெலுங்குதேசம் கட்சி மாநிலம் முழுவதும் நாளை (ஜூன் 5) சைக்கிள் யாத்திரை நடத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
A


விசாகப்பட்டினம் , 04 ஜூன் (ஹி.ச.)

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தெலுங்குதேசம் கட்சி மாநிலம் முழுவதும் நாளை (ஜூன் 5) சைக்கிள் யாத்திரை நடத்துகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் ஹெலிபேடில் இருந்து அவர் தங்கியிருக்கும் இடம் வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மங்களகிரியில் உள்ள தெலுங்குதேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் மாநில தலைவர் பல்லா ஸ்ரீனிவாசராவ் இதை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் தற்போது காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் மாசுபாடு, குறைந்து வரும் பசுமை வளம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, பொதுமக்களின் கடமையும் ஆகும். இதை வலியுறுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் சைக்கிள் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சைக்கிள் பயன்பாட்டால் காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் நுகர்வு குறைவதுடன், உடல்நலமும் மேம்படும். சிறிய முயற்சிகளே பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு சைக்கிளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்க வேண்டும்.

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது அவசியமாகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய என் நாடு - என் பொறுப்பு என்ற எண்ணத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA