Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசியல்வாதியும், முன்னாள் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியுமான கு. அண்ணாமலை, கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டியில் ஜூன் 4, 1984-ல் பிறந்தார்.
கர்நாடகாவில் 'சிங்கம்' என்று அழைக்கப்பட்ட இவர், தனது காவல் துறையை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலில் நுழைந்தார்.
2011-ஆம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரியான அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் பல முக்கிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பி.எஸ்.ஜி கல்லூரியில் பொறியியலும், ஐ.ஐ.எம் லக்னோவில் (IIM Lucknow) முதுநிலை மேலாண்மை (MBA) பட்டமும் பயின்றவர்.
நேர்மையான மற்றும் அதிரடியான செயல்பாடுகளால் பொதுமக்களிடையே பெரும் நற்பெயரைப் பெற்றார்
அரசியல் பயணம்:
2019-ஆம் ஆண்டு தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தார்.2020-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார்.
ஜூலை 2021-ல் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டு, ஏப்ரல் 2025 வரை அப்பதவியை வகித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்டார்.
இவர் தனது கடுமையான உழைப்பு மற்றும் துணிச்சலான கருத்துக்களால் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்த பெரிதும் பங்காற்றினார்.
தற்போது அவர் பாஜக கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ளார்.
Hindusthan Samachar / Durai.J