தமிழக சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் செயலாளராக சாந்தி பதவியேற்பு
சென்னை, 04 ஜூன் (ஹி.ச) தமிழக சட்டமன்றப் பேரவையின் புதிய செயலாளராக சாந்தி பதவியேற்றுள்ளார். இதன் மூலம், தமிழக சட்டமன்றப் பேரவையின் வரலாற்றில் முதல் பெண் செயலாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, சட்டமன்றப் பேரவை செயலாளராக பணியாற்றி வந்த
Shanthi


சென்னை, 04 ஜூன் (ஹி.ச)

தமிழக சட்டமன்றப் பேரவையின் புதிய செயலாளராக சாந்தி பதவியேற்றுள்ளார். இதன் மூலம், தமிழக சட்டமன்றப் பேரவையின் வரலாற்றில் முதல் பெண் செயலாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, சட்டமன்றப் பேரவை செயலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கூடுதல் செயலாளராகவும் பின்னர் சிறப்புச் செயலாளராகவும் பணியாற்றி வந்த சாந்தி இந்த உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைச் செயலகத்தில் பல்வேறு நிர்வாக மற்றும் சட்டமன்றப் பணிகளில் நீண்டகால அனுபவம் கொண்ட சாந்தி, தனது பணிக்காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது நிர்வாகத் திறன் மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தின் சிறப்புச் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருந்த சாந்தி, தற்போது சட்டமன்றப் பேரவையின் உயரிய நிர்வாகப் பொறுப்பான செயலாளர் பதவியை ஏற்றுள்ளார்.

தமிழக சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் செயலாளராக சாந்தி பதவியேற்றிருப்பது, பெண்களின் நிர்வாகப் பங்களிப்பில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ