சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது சீறிப்பாய்ந்த கார் - மூன்று கட்டிடத் தொழிலாளர்கள் படுகாயம்
ராணிப்பேட்டை, 04 ஜூன் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வந்த கார் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சாலையோரம் அமர்ந
சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது சீறிப்பாய்ந்த கார் - மூன்று கட்டிடத் தொழிலாளர்கள் படுகாயம்


ராணிப்பேட்டை, 04 ஜூன் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வந்த கார் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சாலையோரம் அமர்ந்திருந்த கட்டிடத் தொழிலாளர்கள் குணா வயது 55, மூர்த்தி வயது 45, மற்றும் நிலா வயது 47 ஆகியோர் மீது பெங்களூரு நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்து துடித்தனர்.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, படுகாயமடைந்த மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காவேரிப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குணா மற்றும் நிலா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவேரிப்பாக்கம் போலீசார், காரை ஓட்டி வந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கக் கலக்கமா அல்லது அதிவேகமா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற விபத்துகள், சாலையோரம் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b