Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 04 ஜூன் (ஹி.ச.)
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிரிஸ்டோபர் திலக் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த கட்சிகளை அல்லு சில்லு என்று திமுகவினர் தரந்தாழ்ந்து விமர்சிக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட புலம்பல் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த ஐந்து ஆண்டுகளும் தமிழக வெற்றிக் கழகம் திறமையான நல்லாட்சியை கொடுக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் மோடி, அமித் ஷா படம் ஓடவில்லை என்பதால், தற்போது அண்ணாமலையை வைத்து படம் போட திட்டமிடுகின்றனர்.
அண்ணாமலை புதுக் கட்சி ஆரம்பிப்பதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமித் ஷா மோடிக்கு தொடர்பு இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறினார்
திமுக தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை அலசி ஆராயாமல் இன்ஸ்டாகிராம் மீதும் காங்கிரஸ் மீதும் பழி போடுவது நியாயம் இல்லை.
இந்த தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாம் ஏராளமாக செலவு செய்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரிய அளவில் செலவில்லாமல் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
அதனால் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள், மக்கள் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN