மின்வாரிய விஜிலென்ஸ் அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் மாயம் - விசாரணை தீவிரம்
சென்னை, 04 ஜூன் (ஹி.ச.) சென்னை மின்வாரிய (EB) விஜிலென்ஸ் அலுவலகத்தில் பல முக்கிய ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக 8 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக புகார் அளிக்கப்ப
Eb


சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)

சென்னை மின்வாரிய (EB) விஜிலென்ஸ் அலுவலகத்தில் பல முக்கிய ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக 8 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடத்தப்பட்ட உள்துறை விசாரணையில், 20-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருக்கலாம் என போலீசாரிடம் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 10 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தின் 9-வது மாடியில் செயல்படும் மின்வாரிய விஜிலென்ஸ் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் ஹார்ட் டிஸ்கும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் நேரடியாக விசாரணையை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்ட் டிஸ்க்களில் இருந்த தகவல்களின் தன்மை, அவை எப்போது மற்றும் எவ்வாறு காணாமல் போனது, பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கை வெளியாகும் வரை முழுமையான தகவல்கள் காத்திருக்கப்படுகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ