Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 05) மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு, சின்மயா நகர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை அமலில் இருக்கும்.
மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் துணை மின்நிலைய உபகரணங்களில் மேற்கொள்ளப்படும் அவசிய பராமரிப்புப் பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பராமரிப்புப் பணிகள் திட்டமிட்டபடி முடிவடைந்தவுடன், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் சீராக வழங்கப்படும் என்றும், பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறும், மின் தடை நேரத்தில் மின் சாதனங்களை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்குமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண் 1912-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b