Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 04 ஜூன் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதர்காடு பகுதியைச் சேர்ந்த சுகுமார் கடந்த மே மாதம் 2-ம் தேதி வழக்கமான பணிகளுக்காக சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பிதர்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த சுகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b