Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 04 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (43). இவரது மகன் மகாராஜன் (19). மகாராஜன், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த உறவை கைவிடுமாறு மாயாண்டி தனது மகனிடம் பலமுறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காதல் விவகாரம் தொடர்பாக தந்தை-மகன் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை இந்த பிரச்சினை மீண்டும் வெடித்த நிலையில், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த மகாராஜன், அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து தந்தை மாயாண்டியை சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நெல்லை சந்திப்பு போலீசார், மாயாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மகாராஜனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு மற்றும் காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN