Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 04 ஜூன் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 21 முதல் 55 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெற உள்ளனர். இதற்காக ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,96,616 பயனாளிகளுக்கு தகுதிக்கு ஏற்ப ரூ.2,500, ரூ.3,000 மற்றும் ரூ.4,000 வழங்கப்படும். ஏப்ரல் மாத உதவித்தொகைக்காக ரூ.56.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், PIPDIC நிறுவனத்தின் பங்குதாரர்களான புதுச்சேரி அரசு மற்றும் IDBI Bank ஆகியோருக்கு ரூ.37.76 லட்சம் பங்குத்தொகை மற்றும் சிறப்பு பங்குத்தொகை வழங்குவதற்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முடிவுகள் மூலம் பெண்கள், முதியோர் மற்றும் தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam