புதுச்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
புதுச்சேரி, 04 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள ஜெயமூர்த்தி ராஜா நகர், கலைவாணி வீதியில் நேற்று மாலை தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் மீது திடீரென மின்கம்பத்திலிருந்து மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. இதில் மின்சார
மின்சாரம்


புதுச்சேரி, 04 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள ஜெயமூர்த்தி ராஜா நகர், கலைவாணி வீதியில் நேற்று மாலை தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் மீது திடீரென மின்கம்பத்திலிருந்து மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதால் தந்தை மற்றும் மகன் இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது சிறுவன் மின்சார ஒயரில் சிக்கிக்கொண்டு துடிதுடித்த நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரது தந்தை சாதுரியமாக செயல்பட்டு சிறுவனை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும், அருகில் இருந்த பொதுமக்களும் உதவிக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், மின்சாரம் தாக்கியதால் வலியால் துடிக்கும் சிறுவனையும், அவரை காப்பாற்ற தந்தை போராடும் தருணங்களும் பதிவாகியுள்ளன.

இதே பகுதியில் கடந்த மார்ச் மாதத்திலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தது. அப்போது சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்.

அவர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இதுபோன்ற விபத்து நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பழைய மின்கம்பங்கள் மற்றும் சேதமடைந்த மின்சார ஒயர்களை அகற்றி புதிய வசதிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்துமாறு ரங்கசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் அலட்சியம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam