முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் பரபரப்பு
புதுக்கோட்டை, 04 ஜூன் (ஹி.ச.) அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் விராலிமலை தொகுதியின் பல்வே
Vijayabaskar


புதுக்கோட்டை, 04 ஜூன் (ஹி.ச.)

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் விராலிமலை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஆதரவு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சி.விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில், அவரது ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், சி.விஜயபாஸ்கர் தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அவர் தவெகவில் இணைய உள்ளதாக பரவி வரும் தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அதிமுகவில் தொடர்வாரா? தவெகவில் இணைவாரா என்று சி.விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN