Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அதனை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐந்து நாட்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P