Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
தமிழின் பிரபல இயக்கு வரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா இயக்கி நடிக்கும் திரைப்படம் கில்லர் இதன் படப்பிடிப்புக் காட்சி பெரம்பூர் பேலன்ஸ் சாலைஉள்ள வளாகத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது.
இன்று அதிகாலை கேஸ் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் மதன் என்ற தொழில்நுட்ப கலைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பின்னிவில் வளாகத்திற்கு உள்ளாக படப்பிடிப்பு நடைபெற்றதால் போலீஸிடம் அனுமதி பெறவில்லை என தெரியவந்துள்ளது.
இருப்பினும் விபத்து ஏற்பட காரணமாக இருந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
கேஸ் சப்ளை ஒப்பந்ததாரர் ராமு மற்றும் பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து ஓட்டேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து செய்துள்ளனர்.
தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக பின்னி பில் மேற்பார்வையாளர் கண்ணன், படத்தின் சண்டை பயிற்சியாளர் உள்ளீட்ட படக்குழுவை சேர்ந்த 8 பேருக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
இன்று விசாரணைக்கு ஆஜாரக உள்ளனர்.
போலீசார் அனுமதி பெறாதது குறித்தும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
உயிர் இழந்த மதனின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam