Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 04 ஜூன் (ஹி.ச)
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஒரத்தூர் மாதானம் பகுதியில் நேற்று நள்ளிரவில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிராம பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேளாங்கண்ணி போலீசார், சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளி டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்த இருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஜேசிபி ஓட்டுநர்களான சதீஷ் மற்றும் அரவிந்த் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மூன்று டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b