Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 04 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல், கணிதம், புவியமைப்பியல், இயற்பியல், பி.ஏ. பொருளியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு நாளை (ஜூன் 05 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
அன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், அந்தமான்- நிக்கோபார் தமிழ் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.
வருகிற 8-ந்தேதி பி.எஸ்.சி. பாடப்பிரிவுகளுக்கும், 9-ந் தேதி பி.காம்., பி.ஏ. பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் குறிப்பிட்ட நாட்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல் தலா 3 பிரதி, வருமான சான்று நகல் 3 பிரதி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, சேர்க்கை கட்டணம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வரவேண்டும்.
மேலும் காலியிடங்கள் இருக்கும் பாடப்பிரிவுகளுக்கு 18-ந்தேதி வரை தொடர் கலந்தாய்வு நடைபெறும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சந்தனமாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b