தென்மேற்கு பருவமழை தொடக்கம் - குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து!
தென்காசி, 04 ஜூன் (ஹி.ச.) கேரளாவில் தென்மேற்குப் பருவமழையானது தொடங்கியுள்ள நிலையில், தமிழக- கேரள எல்லைப் பகுதியில் இரவு முதல் லேசான சாரல் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி
Courtallam Falls


தென்காசி, 04 ஜூன் (ஹி.ச.)

கேரளாவில் தென்மேற்குப் பருவமழையானது தொடங்கியுள்ள நிலையில், தமிழக- கேரள எல்லைப் பகுதியில் இரவு முதல் லேசான சாரல் மழை பொழிந்து வருகிறது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மெல்லிய சாரல் மழை பொழிந்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக தற்போது ஐந்தருவியில் உள்ள 5 கிளைகளிலும் தண்ணீர் வரத்து வரத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் மழைக்கால சீசனானது களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், 3 நாட்கள் தாமதமாக இன்று முதல் பருவமழையானது லேசாக பெய்ய தொடங்கியுள்ள நிலையில், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் முதற்கட்டமாக தண்ணீர் வரத்து வரத் தொடங்கியுள்ளது.

மேலும், குற்றாலம் பகுதியில் உள்ள மற்ற அருவிகளான மெயின் அருவியில் பராமரிப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN