Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
பிரபல பைக் ரேஸரும் பாஜக பிரமுகருமான அலிஷா அப்துல்லா, நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி, யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த புகார் அடிப்படையில் திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன் 04) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், திமுக எம்.பி., திருச்சி சிவாவின் மகன் ஆவார். இந்த புகாரில் தொடர்புடைய யூடியூபர் முக்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி சூர்யா சிவா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சூர்யா சிவாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b