Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடித்தது.
முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார்.
ஆட்சியமைத்த பின் அமைச்சரவை அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., ஐ.யு.எம்.எல். போன்ற கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கி ஆட்சியில் பங்கு கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் என அறிவிபப்பு வெளியாகியுள்ளது.
த.வெ.க. ஆட்சியமைத்த பின் முதல் முறையாக நடக்கும் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், பட்ஜெட் கூட்டத் தொடர், முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P