Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 04 ஜூன் (ஹி.ச.)
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர்வரத்து மற்றும் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு விவசாயிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணை ஆகியவை திருநெல்வேலி மாவட்ட விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் முதுகெலும்பாக உள்ளன.
இவற்றின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து விவரங்கள் இன்று காலை நிலவரப்படி வெளியாகியுள்ளன.
மொத்தம் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 67.10 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த அணைக்கு வினாடிக்கு 204 கன அடி நீர் வந்து கொண்டிருக்க, பாசன தேவைக்காக வினாடிக்கு 395 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போதைய நீர் மட்டம் 49.4 அடியாக பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக வினாடிக்கு 204 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்து அதிகமாக இருப்பது அணைக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையை பொறுத்தவரை தற்போது 63.29 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த அணைக்கு தற்போது நீர்வரத்து இல்லை. அதேபோல் அணையில் இருந்து நீர் திறப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் நிலையாக உள்ளது.
வரும் நாட்களில் பருவமழை தீவிரமடைந்தால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b