Enter your Email Address to subscribe to our newsletters

மூலபாடு, 05 ஜூன் (ஹி.ச.)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று பசுமை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மூலபாடு பகுதியில் உள்ள ‘பட்டர்ஃப்ளை பார்க்’ில் அவர் “வெள்ளை பொனிகி” மரக்கன்றை நட்டார். அந்த மரக்கன்றை தனது தாயார் அஞ்சனா தேவி அவர்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்த வெள்ளை பொனிகி மரம் கொல்லபள்ளி பொம்மைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால், இதற்கு கலாசார முக்கியத்துவம் உள்ளது.
நிகழ்வின்போது பேசிய அவர்,
ஒவ்வொருவரும் தங்கள் தாய் பெயரில் குறைந்தது ஒரு மரக்கன்றை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மாநிலம் முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘வன மகோற்சவம்’ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதன் கீழ் 2.5 கோடி விதை பந்துகள் (Seed Balls) தயாரித்து வனப்பகுதிகள், தரிசு நிலங்கள் மற்றும் அரசு காலி நிலங்களில் பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இயற்கையான முறையில் காடுகள் உருவாகி, எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான காற்றும் பசுமையான சூழலும் கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA