தமிழக அரசியலில் பரபரப்பு - இன்று மதியம் மனம் திறக்கிறார் அண்ணாமலை..!
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை அண்மையில் டெல்லி சென்று அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது, தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக முக்
அண்ணாமலை


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை அண்மையில் டெல்லி சென்று அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளின் போது, தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கட்சியில் இருந்து விலகும் எண்ணத்தை அண்ணாமலை வெளிப்படுத்தியதாகவும், அதுகுறித்து கட்சித் தலைமையுடன் விரிவாக விவாதித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

எனினும், இதுகுறித்து பாஜக தரப்பிலோ அல்லது அண்ணாமலை தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், தமிழக அரசியலில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தேசிய சிந்தனையையும், தமிழக நலன் சார்ந்த கொள்கைகளையும் முன்னிறுத்தும் வகையில் புதிய அரசியல் இயக்கத்தை வடிவமைக்கும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுடன் நேரடியாக உரையாடவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதனால் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P