தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவு
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் www
Application registration for Tamil Nadu engineering admissions concludes today


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கிய இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், மாநிலம் முழுவதும் இருந்து மாணவர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை சுமார் 3 லட்சம் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2.38 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி தங்கள் பதிவை உறுதி செய்துள்ளனர்.

மேலும், 2.14 லட்சம் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள், நாளைக்குள் அந்தப் பணியை முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, சான்றிதழ் பதிவேற்றத்தையும் முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் குறித்த அறிவிப்புகள் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b