Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 ஜூன் (ஹி.ச.)
கோவை விளாங்குறிச்சி சாலையில் அண்ணாமலை ஆதரவாளர் பாலாஜி உத்தமராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து we the leader என்ற இயக்கத்தை தொடங்கி சிறிது காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார்.
டிசம்பர் மாதம் ராஜினாமா கடித்தை அளித்து உள்ளார் கட்சி தலைமை தேர்தல் முடிந்த பிறகு ராஜினாமா செய்யக் வேண்டும் என தெரிவித்துள்ளது.
நாங்களும் கட்சியின் அடிப்படை பொறுப்பை ராஜினாமா செய்து விட்டோம். 12 மணிக்கு தொடங்கி நிலையில் தற்பொழுது 3 லட்சத்து பேர் we the leader இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்
அரசியல் பிடிக்காதவர்கள் மற்றும் கட்சியைச் சார்ந்தவர்கள் கூட இந்த இயக்கத்தில் சேர்ந்து உள்ளார்கள். அண்ணாமலை கூறியது போல அனைத்து கட்சி போல தான் பிஜேபியும் பார்க்க முடியும்
பிஜேபி மட்டுமில்லாமல் அனைத்து கட்சியில் இருந்து கூட உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்
டாக்டர் அப்துல் கலாம் பெயரில் இயக்கம் தொடங்கி அதில் கட்சியின் இணைபவர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கப்படும் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விரைவில் அண்ணாமலை அறிவிப்பார் தின தெரிவித்தார்
அண்ணாமலை அரசியல் மற்றும் கொள்கை சார்ந்த தான் அனைவரும் இணைந்துள்ளதாக தெரிவித்தார். அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற பிறகு நாங்களுக்கும் ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளோம்.
அண்ணாமலை நேர்மையாக,வேகமாக அரசியல் செய்யக்கூடியவர் அதனால் தான் நாங்கள் அவரிடம் பயணம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
பாஜக சித்தாந்தம் வேறு எங்கள் கட்சியின் சித்தாந்தம் பேறு. நாங்கள் பிஜேபியின் B-Team இல்லை.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை குறித்து கூறிய கருத்திற்கு அவரோட பார்வையில் அது சரியான கருத்து ஆனால் எங்கள் பார்வையில் அது சரியான கருத்து இல்லை
சுதந்திரமாக செயல்பட முடியாத காரணத்தினால் கட்சி ஆரம்பத்தில் இருக்கலாம். இனி விஜய் மற்றும் அண்ணாமலை தான் அரசியல் களத்தில் இருப்பார்கள்
கட்சி செலவு குறித்து கேள்வி எழுப்பியதற்கு,
அண்ணாமலைக்கு ஆதரவாக பலரும் இருக்கிறார்கள் பலர் செலவு செய்வார்கள் என தெரிவித்தார்.
நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு எங்களுக்குள் முடிவு செய்து மாநாடு நடத்த உள்ளிட்ட பல்வேறு செலவுகளை ஏற்றுக் கொள்ளுவோம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN