152 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தவெக பெற வேண்டும் - திமுக எம்பி வில்சன்
நீலகிரி, 05 ஜூன் (ஹி.ச.) திமுக எம்பி வில்சன் உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உயர் சிறப்பு மருத்துவ படிப்பு குறித்த வழக்கில் கடந்த 2020-ல் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதற்கான அரசாணையும் அன்றய தமிழக அரசு கொண்டு வந்தது.
DMK MP Wilson


நீலகிரி, 05 ஜூன் (ஹி.ச.)

திமுக எம்பி வில்சன் உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உயர் சிறப்பு மருத்துவ படிப்பு குறித்த வழக்கில் கடந்த 2020-ல் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதற்கான அரசாணையும் அன்றய தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் தொடர்ந்து வாதாடி பணியில் உள்ள பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு பெற்று வழக்கில் வெற்றி பெற்றது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு 152 அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைத்து வந்தது.

ஆனால் கடந்த 29ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற உயர் சிறப்பு மருத்துவர் இடம் குறித்த வழக்கில் தமிழக அரசு சார்பாக யாரும் ஆஜராகாததால் 152 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படுவதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில் தமிழகத்திற்கான உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விடும். இதனால் தமிழக மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 2022-ல் நடைபெற்ற மாநில மற்றும் அகில இந்திய இட ஒதுக்கீட்டின் போது போதிய மாணவர்கள் இல்லாததால் காலியாக இருந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு மாற்றப்பட்டது.

ஆனால் தற்போது உயர் சிறப்பு மருத்துவ படிப்பிற்காக ஏராளமான மருத்துவர்கள் உள்ள நிலையில் இந்த விவகாரத்தை தற்போதைய தவெக அரசு முறையாக கையாளாவில்லை.

மேலும் கடந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதின்றத்தில் தமிழக அரசு சார்பாக யாராவது ஆஜராகி இருந்தால் 152 இடங்களை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தற்போதைய தமிழக 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் மீண்டும் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தற்போதைய அரசு உயர் சிறப்பு மருத்து படிப்பு இடங்கள் விவகாரத்தில் தவெக அரசு மோசமாக செயல்பட்டதை அவரே ஒத்து கொள்கிறார் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN