Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகரில் ஜூன் 1-ம் தேதி முதல் 105 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதாகவும், 125 டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் மாநகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சென்னையில்
700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3000 மாநகரப் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் முந்தைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட ‘விடியல் பயணத் திட்டத்தின்’ கீழ் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள், முதியோர் என லட்சக்கணக்கானோர் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வேகமாகப் பரவின.
குறிப்பாக, 105 மகளிர் சிறப்புப் பேருந்துகளும், 125 டீலக்ஸ்-எக்ஸ்பிரஸ் பேருந்துகளும் ஜூன் 1 முதல் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அதே நேரத்தில், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி பயணிகள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b