அதிரடியாக குறைந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,
தங்கம்


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2 நாட்களுமே எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை நேற்று கணிசமாக குறைந்தது.

அந்த வகையில், நேற்று ( ஜூன் 4) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.12,105க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.96,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P