காயிதே மில்லத் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறிய
மு.க.ஸ்டாலின்


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.

பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam