Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தையும் பாஜக தலைமை ஏற்றுக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாகவும் அடுத்து வரக்கூடிய தேர்தலில் கட்சியாக போட்டியிட உள்ளதாகவும் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியது குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில்,
2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?
அமித் ஷாவின் அனுமதியுடன்,
மோடியின் ஆசீர்வாதத்துடன்,
BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி.
பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம்.
கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா?
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது
தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது.
இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள்.
முகமூடி மாறலாம்.
ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN