அதிக பிரசங்கித்தனம் - பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) தவெக தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதாக வெளியான பதிவு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச
பெ.சண்முகம்


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

தவெக தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதாக வெளியான பதிவு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,

புதிய கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறி, அதில் சிபிஐ(எம்) பெயரையும் இணைத்திருப்பது தவறானது என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ யாரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவெக ஆட்சி அமைக்கும் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறித்து ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி கட்சியின் நிலைப்பாட்டை தவறாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பிரவவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட பதிவை விமர்சித்துள்ள பெ.சண்முகம், அந்த பதிவை 'அதிக பிரசங்கித்தனம்' என்று தான் சொல்ல வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P