Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 05 ஜூன் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய விசைத்தறி தொழிலாளர்களை மையப்படுத்தி சட்டவிரோதமாக கிட்னி விற்பனை நடைப்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி, மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, அப்போதைய தென்மண்டல ஐஜி பிரேமானந்தா சின்கா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணையானது நடைப்பெற்றது.
இதில் பாதிக்கப்பட்ட பள்ளிபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்டோரின் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இடைத்தரகர்கள் திராவிட ஆனந்த், ஸ்டான்லி மோகன் உட்பட 14 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு குமாரபாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட 14 பேரும் ஜாமினில் வெளிவந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கானது குமாரபாளையம் நீதிமன்றத்தில் இருந்து நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மாற்றப்பட உள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு சார்பில், 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும், இந்த புலன்விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சுரேஷ்குமார், ஆகியோரது தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு சார்பில் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சென்னையில் உள்ள சுகாதாரத்துறை மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திற்கு தனி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam