நெல்லையில் தந்தை கொலை வழக்கில் மகன் உட்பட 4 பேர் கைது
நெல்லை, 05 ஜூன் (ஹி.ச.) நெல்லை சந்திப்பு அருகே தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (எ) மகேஷ் என்பவர் நி
கைது


நெல்லை, 05 ஜூன் (ஹி.ச.)

நெல்லை சந்திப்பு அருகே தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (எ) மகேஷ் என்பவர் நிதி நிறுவனத் தொழில் செய்து வந்தார். குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கும், அவரது மகன் மகாராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட வாக்குவாதம் அதிகாலை மீண்டும் முற்றியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில், மாயாண்டி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த கொலைச் சம்பவத்தில் மகன் மகாராஜன் மட்டுமின்றி, மாயாண்டியின் மனைவி கல்யாணி, மைத்துனர் பாலசுப்ரமணியன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மகாராஜன், கல்யாணி, பாலசுப்ரமணியன் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நெல்லை சந்திப்பு மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P